பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 121 வந்தேறிகளால் நொந்தழுவார் போல் கோடை கொடுமையில் வாடலானோம் புரட்சியின் புழுக்கத்தின் பின் பொதுவுடைமை போல் புகுந்தது மாரியே’’ எனும் பாடல் புலப்படுத்தும். காலையில் தன் காதல் மனைவியை விட்டுப் பிரிந்து சென்ற கணவன் வாராது காலம் நீட்டிக்கக் கண்டு வருந்தி விம்முதல் கொள்ளும் மனைவியை ஒர் இடத்தில் காண் கிறார் கவிஞர். குளிர்நீர்த் தடாகத்தில் சந்திரனின் கதிர் வாராமையால் அல்லி கூம்பி இருக்கும் காட்சியையும் காண் கிறார். சந்திரன் இல்லையென்றால் அல்லி கூம்பி இருத்தல் இயற்கை. எனினும் இதற்கு மாறாகக் கவிஞர் தன் கற்பனையில் காலையில் பிரிந்த கணவன் வரவிற்காக மனைவி வாடுதல் போல் வாடுகிறது என்று வேறொரு காட்சியோடு இயைத்துக் காட்டுகிறார். தமிழர்களின் அக வாழ்வையும், இயற்கை ஈடுபாட்டையும் கற்பனை மூலம் கவிஞர் காட்டும் பாங்கு எண்ணி மகிழ்தற்குரியதாம். இதனை, காலையிற் பிரிந்த கணவன் தனக்குக் காத்திருந்தே தன் மனைக்கு மாலை வரும் என்று தேம்பும்-ஒரு மங்கை போல் அல்லியும் கூம்பும்?" எனும் 'தேனருவி'ப் பாடல் முழக்குகிறது. குழந்தையைத் தாலாட்டு முகத்தான் அமைந்த கவிஞரின் மற்றொரு பாடலிலும் இக்கற்பனை அமைகிறது. குழந்தையை வானத்திலிருந்து நழுவி வந்த வளர்பிறை என்றும், அதன் கன்னத்தைக் கனி என்றும், சிரிப்பைச் செல்வச் சிரிப்பென்றும் உவமித்துக் கூறுகிறார் கவிஞர். இறுதியில் அன்னை முகத்தை நிலவாகவும், குழந்தையின் கண்களை அல்லியாகவும் உவமிக்கின்றார். அத்துடன் முரணாகவும் அமைத்துள்ளார். அன்னை முகம் நிலவு шт—8