பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் போன்றது என்றாலும், அதனைக் கண்டு அல்லி மலர் போன்ற விழிகள் திறந்துவிடக் கூடாது; உறங்கவேண்டும் என்று அவ்வன்னை குழவியிடம் கூறுவதுபோலக் கவிஞர் கூறுகிறார். தாய் சேய் நிலையை நிலவு - அல்லி இவற் றோடு இயைத்துக் கற்பனை நயம்பெருகப் படைத்தளிக்கும் பாங்கு, வான் நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு கன்னம் பூரித்துக் கனியுதடு மின் உதிர்த்துச் சின்ன விழிபூத்துச் சிரித்ததென்ன செல்வமே? அன்னை முகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச் சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு' எனும் பாடல் உறைவிடமாகிறது. கருத்து விளக்கக் கற்பனை ஒரு கருத்தை, இயற்கையான நிகழ்ச்சி ஒன்றின்மேல் கற்பித்துக் கூறுவதைக் கருத்து விளக்கக் கற்பனை என்பர். பெண்கள் பலர் தமது வீட்டுக் கடமைகளைக் கவனி யாமல் அண்டை வீட்டுச் செய்திகளை, நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள ஒட்டுக்கேட்கும் (ஒற்று) பழக்கத்தைக் கைக்கொள்கின்றனர். இதனால் பிறருடன் சண்டை மூளும்; வீண் பொழுதாய்க் காலம் கழியும் என்ற கருத்தை மயிலின் மேல் ஏற்றியுரைக்கின்றார் கவிஞர். மயிலிடம், உன் கழுத்து நீண்டு இருப்பது ஏன் தெரியுமா? என வினவும் கவிஞர் உடனே விடையாக, அதில் ஓர் இரகசியம் இருக் கின்றது. அதைக் கூறுகிறேன்; ஆனால் மற்றப் பெண் களிடம் கூறாமல் இருக்க வேண்டும். அச்செய்தி பெண் களுக்குத் தெரிந்தால் என்னை ஏசுவார்கள் என்று கூறி, அயலார் வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்காமல் இருப்ப தற்கே இயற்கையன்னை பெண்களுக்கெல்லாம் கழுத்தைக் குட்டையாகப் படைத்துள்ளாள். உனக்கோ நீண்ட கழுத்தைப் படைத்துள்ளான என்ற செய்தியையும் உரைக் கிறார். இதனை,