பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 123 அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்பதற்கே இயற்கை அன்னை இப்பெண்கட் கெல்லாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ கறையொன்றில்லாக் கலாப மயிலே கிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்! o இங்குவா உன்னிடம் இன்னதைச் சொன்னேன் மனதிற் போட்டுவை; மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதற்காக 182 என்னும் பாடலால் உணரலாம். இப்பாடல் நகைச்சுவை யையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. அறம் ஒன்றே உயர்ந்தது; சிறந்தது. ஆதலால் இருப்போர் இல்லாதார்க்குக் கொடுத்து வாழ வேண்டும். அப்படிச் செய்கின்ற கொடை கொளல்தன்மை போற்றுதற் குரியது என்று தம் கருத்தை விளக்க விரும்புகிறார் கவிஞர். இதற்கு மலர்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வாயிலாகத் தம் கருத்தை உரைக்கின்றார். செங்காந்தள் மலர் விரிந்து ஏந்தினாற்போல் இருப்பதும், புன்னை மலர் பூத்து உதிர்வதும் சோலையில் குயில் கூவுவதும் இயற்கை இவ்வியற்கை நிலையை, காந்தள் மலர் கையேந்தித் தாழ்ந்து நிற்க, உயர்ந்த புன்னை எனும் பெண் தன் மலர்கள் என்னும் பொன்னை, காந்தள் என்ற ஏழைக்கு வழங்க, அதனைக்கண்டு- இக்கொடைத் தன்மையைக் கண்டு - களிப்புறும் குயில் இதுபோன்ற கொடைத்தன்மை குவலயத்தில் என்றும் வாழ்க என்று எக்காளமிட்டு முழங்குவதாக ஆசிரியர் கூறுகின்றார். இயல்பான நிகழ்ச்சியின் மேல் தம் கருத்தைச் சாற்றியுள்ள திறம் போற்றற்குரியது. இதனை, நின்ற செங்காந்தட்பூ நேரிற் கையேந்த நெடுங் கொன்றை மலர் பொன்னைக் கொட்டுகின்றாள்-என்றே ஆடைகுயில்கள் எக்காளமிட்டு ஆர்த்தனவே மண்ணிற் கொடை வாழ்க என்று குறித்து: எனும் பாடல் பரிமாறக் காண்கிறோம்.