பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உள்ளவாறு அமையும் கற்பனை ஒரு காட்சியைக் காணும்போது அதன்மீது தன் புதிய எண்ணக் கோவையை மிகுதியாகவோ, குறைவாகவோ புகுத்தாமல் இயல்பாக, இருப்பவற்றைச் சொல்நயம் மிளிரக் கூறும் கற்பனை உள்ளவாறு அமையும் கற்பனை" எனப்படும். உள்ளவாறு அமையும் கற்பனைக்குப் பொருள்களை ஒழுங்குபடுத்துதலும் அழகுற அமைத்தலும் தேவை என்ற கருத்து ஈண்டு எண்ணற்பாலது. இயற்கை வளப்பம் மிக்க நம் தமிழகத்தின் ஆறு, கடல் ஆகியவற்றினிடத்தும், சோலைகள் மிகுந்தவிடத்தும் பறவை இனங்கள் நிறைந்து வாழ்வது கண்கூடு. அவற்றின் செயல்களை, தன்மைகளை எல்லோரும் காணுகின்றனர். எனினும் மற்றவர்களுக்கு அவை நினைவில் நிற்பதில்லை. ஆழவும் படிவதில்லை. கவிஞர்களிடத்து மட்டும் அவை ஆழ்ந்து படிந்துவிடுகின்றன. படிந்தவற்றை அவர் உள்ளவாறு சொற்கோவையாக அளிக்கின்றார். உள்ளதை உணர்த்தும் இத்திறனை, இலைச்சந்தில் குரங்கின் வாலை == எலியென்று பருந்திழுக்கும்.”* என்பதில் காணலாம். ஆலமரத்தில் குரங்குகளும், எலி களும் ஏறி உலவுதல் உண்டு. பறவை இனங்கள் இம்மரத்தில் அமர்வதும், வட்டமிடுவதும் இயல்பு. இந்நிலையில் குரங்கு தன் உடல் முழுதும் ஒர் இடத்தில் நிறுத்தித் தன் நீண்ட வாலைச் சற்றுத் தள்ளி நீட்டிக் கொண்டு இருக்கின்றது. பருந்தின் கண்ணுக்குக் குரங்கின் உருவம் மறைந்து வால் மட்டும் தென்பட அது தனக்கு விருந்தாகும் எலியினுடைய வால் என்று நினைத்து மயங்கி இழுக்கிறது. இதனை உள்ளவாறே உரைத்துக் கற்பனை நயம் தோன்றக் கவிஞர் விளக்குகின்றார். நீலக்கடலில் அதிகாலைப் பொழுதில் கதிரவன் உதயமாகும் காட்சி எங்கும் காணப் பெருவியப்பை