பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 125 நல்குவதுண்டு. அதனைச் சற்று உற்று நோக்குவோமே யானால் வீறுகொள்ளும் செங்கதிர் ஒரு நீலநிறப் பெட்டியை நீக்கிக் கொண்டு புறப்படுவதுபோல் தோன்றும். இதனையே கவிஞர் கவிதை நயம்படச் சொல்லமைத்து இயல்பான கற்பனையுணர்வுடன் சுட்டுகின்றார். க 1 கீழ்ப்பால் ஒலிகடல் நீலப்பெட்டி உடைத்தெழுந்தது கதிர்தான்' என்னும் பகுதியால் இதனை உணரலாம். உள்ளம் விழைமாறு அமையும் கற்பனை கவிஞர் பலவிதக் கற்பனைகளைப் படைத்தாலும் ஒரு சிலவே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இவ்வாறு கவிஞர் படைப்பில் படிப்பவர் உள்ளம் பறிபோகும் நிலையில் அமையும் கற்பனையை உள்ளம் விழையும் கற்பனை எனலாம். இயற்கையை உள்ளவாறு காட்டாமல் வேண்டாத பகுதிகள் பலவற்றை விட்டு அழகுணர்ச்சிக்கு வேண்டியவை மட்டும் தீட்டப்படுவதால் தான் இக்கற்பனை விரும்பிப் போற்றப்படுகிறது என்ற கருத்து இவண் உன்னற்பாலது. கிழக்கெழும் கதிரவன் மேற்றிசையில் மறைய, இருள் Gloss 2 அதனையடுத்துச் சந்திரன் சுடர் விடுகிறான் என்பதைக் கூறவரும் கவிஞர், கிழக்குப்பெண் விட்டெறிந்த கிளிச்சிறைப் பரிதிப்பந்து செழித்த மேற்றிசை வானத்தில் செம்பருத்திப் பூங்காவின் விழுந்தது! விரிவிளக்கின் கொழுந்தினால் மங்கைமார்கள் இருள்மாற்றிக் கொடுக்கின்றார்கள்?" எ ன்று கூறுகிறார்.