பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இதில் கீழ்த்திசையைப் பெண்ணாகவும், கதிரவனை கிளிச்சிறகாலான பரிதிப்பந்தாகவும், மேற்றிசையை அதன் நிறத்தன்மையால் செம்பருத்திப் பூங்காவாகவும் அதில் விழுந்த பந்தைத் தேடுதற்கு வான் என்னும் மங்கையர் நிலவு, நட்சத்திரம் முதலிய விரிவிளக்குகளை ஏற்றி இருளைப் போக்கிக் கொடுப்பதாகவும் கவிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் க ற் ப ைன ைய ஆண்டுள்ளார். தங்கம் உருக்கித் தகடிட்டுப் பன்மணிகள் எங்கும் அழுத்தி இயற்றியதோர் தொட்டிலிலே திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு மெத்தையின்மேல் மங்கா உடல்மலரும் வாய்மலரும் கண்மலரும் செங்கை மலரும் சிரிப்பின் எழில்மலரும் தங்கா தசைந்தாடும் தண்டை இருகால் மலரும் அங்கங் கழகுசெயும் ஆணழகே கண்வளராய் எங்கள் மரபின் எழில் விளக்கே கண்வளராய்' எனும் இப்பாடலில் குழந்தையைத் தொட்டிலில் இட்டு உறங்க வைக்கும் நிலை இனிதே இயம்பப் பெறுகின்றது. தொட்டிலின் தன்மையை விரிவாகக் கற்பனை செய்தும், குழந்தையை - அதன் உறுப்புகள் ஒவ்வொன் றையும் மலர்களோடு உவமித்தும் ஒர் இயலாத்தன்மை - நடைபெற முடியாத ஒன்றை நடைபெற வைக்கும் நிலைதோன்றப் பாடியுள்ள பாங்கில் கற்பனை வளம் உள்ளம் விழைகின்ற வண்ணம் அமைந்திருக்கக் காணலாம்.

புலவரின் உணர்ச்சி வேடிக்கையாகவும் விளையாட்

டாகவும் அமையும்போது ஆழ்ந்த பண்புகளற்ற, நிலையற்ற வெறும் கற்பனைகள் தோன்றும். புலவரின் உணர்ச்சி ஆழமுடையதாகவும் உயர்வுடையதாகவும் அமையும் போது நிலைபெற்ற விருப்பமுடைய கற்பனைகள் தோன்றும்’ என்பார் மு. வ. இவற்றில் மு. வ. இரண்டா வதாகக் கூறியுள்ள நிலைபெற்ற விருப்பக் கற்பனைகளை,