பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 127 பொருள் பொருந்திய - சீரிய கற்பனைகளையே பாவேந்தர் படைத்துள்ளார். கருத்து ஒரு படைப்பின் பாடுபொருள் எதைப்பற்றி வேண்டு மானாலும் அமையலாம். ஆனால் மனித இனத்திற்குப் பொதுவான உணர்வுகளை வலியுறுத்தி எழுதப்படும் படைப்பே காலத்தை வென்று வாழும் வல்லமையைப் பெறுகிறது. வாழ்க்கை முறைகள், ஒழுக்கம், பண்பு, காதல், ஏக்கம், பிரிவு ஆகியவை சிறந்த பாடுபொருள்களாகக் கருதப்படுகின்றன. பாவேந்தரின் கவிதைகள் இவற்றைப் பலவாறாகச் சிறப்பித்துரைக்கின்றன. வாழ்க்கைச் சுழற்சிக்கு அடிப்படையாவது அன்பு. அனைத்து உயிர் களிடத்தும் அன்பு செலுத்துதல் மனிதனின் கடமை. இறைவனை அடைதலுக்கும் அன்பே ஆணிவேராக-அடிக் கருத்தாகக் கருதப்பட்டதை * அன்பே சிவம்' என்னும் தொடர் விளக்கி நிற்கிறது. வள்ளுவப் பெருந்தகை, அன்பின் வழியதுயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு?? என்று அன்பின் திறத்தை வலியுறுத்துகிறார். பழந்தமிழ் இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் அன்புடைமையின் சிறப்பை ஆழமாக எடுத்தியம்புகின்றன. பாப்பாப் பாட்டுப் பாடிய பாவலர் பாரதி வாழும் முறையை விளக்குகையில் • உயிர்களிடத்தில் அன்பு வேணும்' என உரைக்கக் காண்கிறோம். அவர் வழி வந்த பாவேந்தர் அன்புப் பெருநிலமாய்த் திகழ்ந்தவர். அவர் அன்பினைத் தாயிடத்தில் மிகுதியாகக் காண்கிறார். எனவேதான் மற்ற மனித உள்ளங்களையெல்லாம் கடுகு, துவரை, தென்னை, மாம்பிஞ்சு ஆகியவற்றின் அளவோடு ஒப்பிடுகிறார். தாயானவள் அப்படிப்பட்டவள் அல்லள். துயஉள்ளம் அன்புஉள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும்