பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 11 காளை ஒருவன் கவிச்சுவையைக்-கரை காண நினைத்த முழுநினைப்பில்-அன்னை தோளசைத் தங்கு நடம்புரிவாள்-அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான்-ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த வைய முழுதும் துண்டு செய்வேன்-என நீள இடையின்றி நீ நினைத்தால்-அம்மை நேர் படுவாள் உன்றன் தோளினிலே. பாடலைக் கேட்டவர்கள் திகைப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். பாரதியின் பாடலில் மூழ்கித் திளைத்த அப்பெருமக்களுக்கு அவர் பாணியிலே அமைந்த இப்புதிய பாடல் பேருவகை அளித்ததில் வியப்பில்லை. பாரதியாருக்கு மிகுந்த உற்சாகம். பாடலைப் படி எடுக்கச் செய்து சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது . என்ற குறிப்புடன் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார். பாரதியார் அன்று தொடங்கிய புதிய தமிழ்க் கவிதைப் பண்ணையின் ஓர் உழவராக, சுப்பிரமணிய பாரதியின் அணியிலே சேர்ந்தார் சுப்புரத்தினம். கனக சுப்புரத்தினம் என்ற அவரது இயற்பெயர் மாறி, பாரதிதாசன் என்னும் புனைபெயரே நாளடைவில் அவருடைய பெயராக நிலைபெற்றது. ஆங்கில அரசின் சிறைப்படுத்த எண்ணிய கைகளி விருந்து தப்பிப் புதுச்சேரியில் குடியேறி வாழ்ந்த பாரதியார் அடைந்த இன்னல்கள் ஏராளம். பாரதியார் அடைந்த இடுக்கண்களின் பயனாகத் தமிழ் உலகிற்குப் பாரதிதாசன் அறிமுகம் கிடைத்தது. கேட்டினும் உண்டோர் உறுதி' 1. என்பது திருக்குறள். தேசியக்கவி பாரதியார் புதுவை சென்று தங்கியிருந்ததே பாரதிதாசனை வெளிக்கொணர்வதற்குரிய வாய்ப்பை