பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே" என்று அன்புவழிப்பட்ட தாயுள்ளத்தைப் பாராட்டிப் பாடுகின்றார் பாவேந்தர். அத்தகைய அன்பினை அனைவரும் பேணுதல் வேண்டும் என்னும் அவரது விழைவு குறிப்பாக வெளிப்படக் காண்கின்றோம். அன்புடைய வாழ்க்கை தூய்மையாக அமைந்துவிட்டால் இன்பத்திற்குத் தடையில்லை என்று இசையமுதில் எழுதுகிறார் கவிஞர். உடையினில் தூய்மை - உண்ணும் உணவினில் தூய்மை - வாழ்வின் நடையினில் தூய்மை - உன்றன் கல்லுடற் றுய்மை சேர்ப்பின் தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம் தரும்நாள் ஆகும் கீ என்றும் தூய்மை சேரடா தம்பி' என்று தம்பிக்குத் தருகின்ற கருத்துரை தரணிக்குப் பொதுவானதாய்க் கருதத்தக்கது. உடல், உடை, உணவு, வாழ்க்கை நடை இவற்றில் தூய்மை நிலவின் இன்பம் விளையும்; தடையற்ற இன்பம் விளையும் என்கின்ற சிறந்த கருத்தை - அனைவரும் பின்பற்றத்தக்க கருத்தைப் பாவேந்தர் பகன்றுள்ளார். பிறர் செய்த உதவியை மறக்காத நன்றியுள்ளம் நானிலத்திற்கு வேண்டப்படுவது. செய்தி கொன்றோர்க்கும் உய்தி இல் என்பது புறநானூற்று வழக்கு. இதனையே வள்ளுவர், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு* என்கிறார். இத்தகைய செய்ந்நன்றியறியும் திறத்தை, பிறந்தவர் வாழும் வாழ்வு பிறர் நன்றியின் தொகுப்பே மறவாத தூய உள்ளம் இறவாத வாழ்வு நல்கும்*