பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 129 என்று இறவாத வாழ்வின் அடிப்படையாகப் பாவேந்தர் கருதுகின்றார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்தலே தலையாய வழி என உலகப் பொதுமறை உரைக்கின்றது. பாவேந்தரும், தீது செய்தார்க்கும் நன்மை செய்வர் மூதுணர்ந்தவர் முனிவு செய்யார்* என்று பெரியோர் மேன் மையை எடுத்துச் சொல்லி, பகைமைக்கு மருத்துவம் பார்த்த நிலையைக் காண்கிறோம். இன்பம், துன்பம், இரண்டும் கலந்தது வாழ்க்கை. இன்பத்தை விரும்புவதும், துன்பத்தை வெறுப்பதும் முறையன்று. எதுவரினும் எதிர்நின்று நோக்கும் பக்குவம் பெறவேண்டும். துன்பநிலையில் உழன்றவரே இன்பத்தின் எல்லையை அறியமுடியும். அதனால் ‘மிகுதுன்பம் இன்பத்திற்கு வேர் என்கிறார் பாவேந்தர். படிப்பில்லா தவர்க்கே படிப்பறிவின் மேன்மை புலப்படும். இது போன்றே கரிப்பின்றேல் இனிப்பருமை யாரே கண்டார் காயின்றேல் கனியருமை யாரே கண்டார்* என வினவி இன்ப துன்பங்களின் இன்றியமையாமையைக் கவிஞர் வற்புறுத்துகின்றார். நிேழலருமை வெயிலிலே நின்றறிமின் என்னும் பழம் பாடலை நினைவுகூரச் செய்கிறார் புரட்சிக்கவிஞர். இவ்வாறு நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் மேற்கொள்ள வேண்டிய அன்பு, துய்மை, நன்றியறிதல், இனியவை செய்தல், இன்ப, துன்பங்களில் நடுநிலைமை ஆகிய கருத்துகளைக் கவிஞர் அழகுறச் சுட்டியுள்ளார். சாதாரணமாக நோக்கும்போது இவற்றின் உயர்வு பலருக்குப் புலப்படுவதில்லை. உயிர் வாழ்க்கையின் இயக்கத்திற்கு இக்கருத்துகள் சீரிய பின்னணியாகத் திகழ் கின்றன என்பதை அனுபவத்தால் மூத்தோர் அறிதல் திண்ணம்.