பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஒதுக்க வேண்டிய சில பழக்கங்களைக் கவிஞர் பாடி யுள்ளமை கருதத்தக்கது. புகை பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடானது; வாழ்வில் சலிப்பினை ஏற்படுத்தி நோய்க்கு நிலைக்களமாகிவிடும் என எச்சரிக்கின்றார். புகைச்சுருட்டால் இளமை பறிபோகும் பொல்லாங்குண்டாகும்" என்பது கவிஞரின் அறிவுரை கலந்த எச்சரிக்கை யாகும். புகை பிடிப்பதால் பிடிப்பவர்க்கு மட்டும் தீமை விளைவ. தில்லை; நாட்டிற்கே தீமை நேருகிறது என்கிறார். மாசில்லாத செந்தமிழ் நாடு வறுமை நோய் பெற ஏன் இக்கேடு? ! என்பது நாட்டுணர்வோடு கவிஞர் கூறும் கருத்துரை. காப்பி குடிக்கும் வழக்கம் இன்று பெரும்பாலோரிடத்தில் உள்ளது, கவிஞர் காப்பியை வெறுக்கிறார். காப்பி எதற்காக நெஞ்சே? காப்பி எதற்காக? கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில் காப்பி எதற்காக? தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இனிப்புக்கு வாய்ப்பற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில் காப்பி எதற்காக?* என வினா எழுப்பி நம்மைச் சிந்திக்கத் துரண்டுகிறார். தற்காலச் சூழ்நிலையில் காப்பி குடிப்பதைத் தவிர்த்தல், என்பது அரிது. எனினும் நல்லவை நாடி, நல்லவை மேற் கொள்ளுதல் நலம் பயக்கும் என்பதால் இக்கருத்து ஏற்கத் தக்கதே. இளைஞர் இலக்கியத்தில் நேர்பட ஒழுகு' என்னும் தலைப்பில் எட்டுப் பாடல்கள் பாடியுள்ளார் கவிஞர். அவை இளைஞர்களுக்காகப் பாடப்பட்டவை. இன்றைய குழந்தைகள் நீங்கள். இனி இந்நாட்டினை ஆளப்பிறந்தீர்'