பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 13t என்று குழந்தைகளைக் குறிப்பிடுவார் பாவேந்தர். நாட்டினை ஆளப்போகும் நல்லிளைஞர் கூட்டத்திற்கு, கடன் வாங்கக் கூடாது தம்பி-மிகக் கருத்தாய்ச் செலவிட வேண்டும் உடம்பினைக் காப்பாற்ற வேண்டும் உணவினில் நல்லுணவை உண்பாய் உடைந்திடக் கூடாது நெஞ்சம்-நீ உண்மைக்குப் பாடுபடும் போதில்! அடைந்ததைக் காப்பாற்ற வேண்டும்-ே அயல்பொருள் பறிக்க எண்ணாதே" எனக் கருத்து மணிகளை நல் ஆரமாக அளிக்கின்றார். இளைய தலைமுறையின் வாழ்வில், உயர்வில் கவிஞர் கொண்டிருந்த அக்கறை உணர்வு இதில் வெளிப்படுகின்றது. கொடுமையை எதிர்க்கும் துணிவை இளைஞர்கள் பெற வேண்டும் என்பது புரட்சிக் கவிஞரின் எண்ணம். அவர் அதனை, - கொடிய வர்கள் தாக்க வந்தால் தடியினைத் துாக்கு-வெறுங் கோழைகளை ஏழைகளை வாழ வைப்பாய் நீ" என்று எளியநடையில் உறுதி தோன்ற எழுதியுன்னார். கருத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை நோய்" என்னும் பாடல் வாயிலாகக் குறிப்பிடுகிறார் கவிஞர். மருத்துவர் தருவார் மருந்து மகிழ்ச்சியாக அருந்து வருத்தப் படுதல் ஆகுமோ? வந்தநோய் தான் போகுமோ? திருத்தமாக நடப்பாய் தீண்டுமா சொல் ஒரு நோய் கருத்தாய் நடப்போர் வாழ்வார் கருத்தில்லாதார் வீழ்வார்'