பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:132 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் திருத்தமில்லாத வாழ்க்கை தெளிவில்லாத வாழ்க்கையாகி விடும். வாழ்வியல் நெறிகளை உணர்ந்து இன்றைய இளைஞர் செயல்படல் வேண்டும்; நோயின் மூலம் கருத் தில்லாது கண்டபடி வாழ்வின் ஒழுகலாறுகளை அமைத்துக் கொள்வதேயாம். அதனைத் தவிர்த்திடுக என்று கவிஞர் அறிவுறுத்துகின்றார். உழைப்பின் உயர்வை இளம் உள்ளத்தில் விதைப்பது எதிர்காலச் சமுதாயத்திற்கு நாம் செய்யும் சிறந்த தொண்டாகும். பெற்றோர்கள் பணம் படைத்திருந்தாலும், பிள்ளைகள் தம் சொந்தக்காலில் நிற்கவேண்டும்; பொருள் படைத்திட வேண்டிய வழி முறை நாட வேண்டும். இவ்வுலகில் பொருளுக்கு இருக்கும் மதிப்புப் பெரிது. வள்ளுவர், செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எ.கதனிற் கூரிய தில்' என்று பகையை முறிக்கப் பொருள் ஈட்டுதலை வலியுறுத்தக் காண்கிறோம். வினையே ஆடர்வர்க்குயிர்' என்பது பழந்தமிழர் வாழ்க்கை நெறிகளுள் தலையாயது. இதனைத் தம்முடைய நடையில், பெற்றவர் தேடி வைத்த பெருஞ்செல்வம் உண்டென்றாலும் மற்றும் தான் தேட வேண்டும் மாந்தன் சீர் அதுவே அன்றோ?* என்னும் வினாவுடன் தருகின்றார் கவிஞர். காதல் வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துகளைக் கூறிய கவிஞர் இளைஞருக்கு உரியவற்றையும் - மேற்கொள்ள வேண்டியவற்றையும் உரைத்துள்ளார். அடுத்து, அவ் விளைஞர்கள் பருவமடைந்தவுடன் அடையும் காதல் உணர்வினைப் பாங்குறப் பாடியுள்ளார். பாவேந்தரின் மொத்தக் கவிதைகளுள் காதல் கவிதைகள் மிகுதியானவை.