பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 133. பண்டைத் தமிழர் வாழ்வில் அகமும் புறமும் தலையாய இடம் வகித்தன. வாழ்வின் இரு கண்களாக அகமும் புறமும் கருதப்பட்டன. இதனைச் சங்க நூலும் அதற்கு முற்பட்ட தொல்காப்பிய இலக்கணமும் இனிதே இயம்பு கின்றன. அகம், புறம் என்னும் இருபாகுபாட்டிலும் அகமே தலைசிறந்து விளங்கக் காண்கிறோம்; அகம் குறித்த பாடல்களே சங்க இலக்கியத்தில் மிகுதியாக உள்ளன. அதுபோன்றே பாரதிதாசனாரின் பாடல்களுள் அகவுணர்வைப் போற்றும் காதல் பாடல்கள் பெருமளவில் உள்ளன. காதல் என்பது ஒர் உணர்வு. அது பருவம் வந்ததும் தோன்றும் வளர்பிறை. ஆண், பெண் இருவரின் உளக் கலப்பும், உடற்கலப்பும் இணைந்து வையத்தில் காதலின் மகத்துவத்தை நிலைநாட்டுகின்றன. காதல் அழியாதது என்பது அறிஞர்களின் கருத்து. காதலுணர்ச்சி தோன்றாத காலம் இல்லை. இது தோன்றாத இடமில்லை. இதனுடைய ஆச்சரியமான ச க் தி யி னா ல் இயக்கப்படாத உயிரினமும் இல்லை. மக்கள் அநாகரிகமாய் வாழ்ந்து வந்த காலந்தொட்டு இன்றுவரை இக் காதல் அவர்கள் மனத்தில் நிலைத்து வந்திருக் கிறது. மக்களை விட்டுவிட்டு அவர்களுக்குக் கீழ்த்தரமாயுள்ள பிராணிகளை எடுத்துக் கொண் டாலும் அவைகளிடத்தும் இவ்வுணர்ச்சியானது வியாபித்தே வந்திருக்கிறது. இனி எக்காலத்தி லாவது எங்காவது இவ்வுணர்ச்சி தானும் மறைந்து விடலாம் என்று நினைப்பதற்குமில்லை. ஆகவே இது நித்தியம் என்று சொல்வதில் என்ன தடை? 5 4 என்று காதலின் அழியாத் தன்மையைச் சாற்றுவர். இத்தகு காதல் ஆண் பெண் இருபாலரிடத்தும் தக்க வயது வ ந் த வு ட ன் இயற்கையாய்த் துளிர் விடும். பாவேந்தர், ==