பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

한34 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காதல் அடைதல் உயிரியற்கை! அது கட்டில் அகப்படும் தன்மையதோ' என்று காதலின் கட்டுப்படுத்தவியலா நிலையைக் குறிக் கின்றார். காதல் இல்லாத உலகம் இல்லை. தனையடக்கிக் காதலினைத் தவிர்த்து வாழும் சகம் இருந்தால் காட்டாயோ கிலவே தோன் என நிலவை வினவுகின்றாள், பாவேந்தர் படைத்த புதுமைப்பெண். தெளிந்த உள்ளத்தில் தோன்றும் காதல் அழியாதது; அதன் வளர்ச்சியைத் தடுக்கவியலாது கதிரவனை முகில் சூழ்ந்து கொண்டு அதன் ஒளியைத் தடுத்துவிடும். ஆனால் காதலை எவராலும் தடுத்திட (ԼՔւգւաո :51 விரித்த ஒருவானத்தின் ஒளிவெள்ளத்தை விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்! இருந்த வெயில் இருளாகும் ஒரு கணத்தில் இது அதுவாய் மாறிவிடும் மறுகணத்தில் தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றையொன்று தெளிந்த ஓர் உள்ளத்தில் எழுந்த காதல் பருத்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை." உள்ளத்தில் உறுதியோடு குடிகொண்ட காதல் இன்னல் விளைக்கும் இழி படைகள் எதிர்த்து வரும்போதும் சலியாமல் - சோர்வடையாமல் ஒ வரி வி டு ம் என்பது பாவேந்தர் கண்ட முடிபு. இதனையே, மக்கள் ஒன்று சேர்வதைப் பிறர் தடுக்க முடியும் பெண்ணே; மனம் ஒன்று சேர்வதை - யார் தடுப்பாரடி கண்ணே! என்று பிறிதோரிடத்திலும் கவிஞர் வலியுறுத்திக் கூறு கின்றார். காதல் உணர்வுடையோருக்கு காட்சி, நினைவு