பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 135 பிற செயல்கள் குறித்த சிந்தனை எழுவதில்லை. அவர்கள் ஏறத்தாழ தெய்வீக நிலையில் வாழ்பவர்கள் என்பதை, சாதலும் வாழ்தலும் அற்ற இடம்- அணுச் சஞ்சலமெனும் இல்லாத இடம் மோதலும் மேவலும் அற்ற இடம் - உளம் மொய்த்தலும் நீங்கலும் அற்ற இடம் காதல் உணர்வெனும் லோகத்திலே - அவர் காணல் நினைத்தல் தவிர்த் திருந்தார் ’’ என்ற பாடற் பகுதியில் சுட்டுகிறார். இப்படிப்பட்ட காதல் நினைவில் திளைத்திடும் ஆண்மகன் ஒருவன் தன் காதலியின அழகு நலனைத் திறம்பட இயம்புகின்றான். உண்டாலே தேன், மலரின்தேன் - இவள் கண்டாலே தித்திக்கும் தேன் "" இங்கே காட்சியின் போதே இனிக்கின்றாள் காதலி: பாவேந்தரின் சில காதற் பாடல்கள் பழந்தமிழ் அக இலக்கிய மரபுகளைக் கொண்டு விளங்குகின்றன. முதன் முதலாக, தலைவன் தலைவியைச் சந்திக்கும்போது ஐயம் எழுகின்றது. இவ்வாறு ஐயம் எழுதல் மரபென்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சிறந்துழி ஐயம் சிறந்ததென்ப என்பது தொல்காப்பியனார் கூற்று. இவ்விலக்கணத்திற் கேற்ப இலக்கிய ஆட்சி நிலவுவதையும் காணமுடிகிறது. அணங்குகொல் ஆய்மயில்கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு 82 என்பது வள்ளுவப் பெருந்தகை படைத்த தலைமகளின் ஐயம். இம்மரபு காலந்தோறும் தமிழ் அகப்பாடல்களில் பயின்று வருவதை அறிகின்போம். சுந்தரமூர்த்தி நாயனார் பரவையாறுை க் கண்டு காதல் கொண்டு பாடுகிறார்.