பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடை புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து. விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளே அறியேனென்று அதிசயித்தார். * இது சுந்தரர் கொண்ட ஐயம். குயில்பாட்டில் பாரதியார் குயில் பெண்ணாக மாறியதைக் கண்டு பாடும் போது, விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாங் காட்சியடா! : என வியக்கின்றார். இறுதியில் அங்கு நிற்பது பெண்தான் என உணர்கிறார். அவளது அழகை வருணித்துக் கூற வார்த்தைகள் இல்லை. இருப்பினும் ஒருவாறாக அந்த அழகுப் பதுமையை அறிமுகப்படுத்துகின்றார் பாரதியார். S SS SS SS TTTTTT STTTTSS TTTT SS S S S S S S S S S ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கணிபிழிந்த காற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெல்லாம் ஏற்றி யதனோடே யின்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன் என்று ஐயத்திற்குத் தெளிவுரைக்க முனைகின்றார். அவரது தாசனாகிய பாவேந்தரும், அமுதவல்லியைக் கண்ட புரட்சிக்கவி உதாரனின் கூற்றை ஐயப்பாங்கோடு, வரைகின்றார். என்ன வியப்பிது? வானிலே - இருந் திட்டதோர் மாமதி மங்கையாய் என்னெதிரே வந்து வாய்த்ததோ? -- புவிக் கேதிது போலொரு தண் ஒளி