பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 137 மின்னற்குலத்தில் விளைந்ததோ? - வான் வில்லின் குலத்திற் பிறந்ததோ? கன்னல் தமிழ்க்கவி வாணரின் - உளக் கற்பனையே உருப்பெற்றதோ? ஒரு பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ? ஒரு பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ??? என ஐய வினாக்களை அடுக்கிக் கூறும் பாங்கினை அகமரபைப் பின்பற்றும் பாரதிதாசனிடம் காணமுடி கின்றது. ஐயத்திலிருந்தும் வியப்பிலிருந்தும் விடுபட்ட தலைவன் தலைவியை நலம் பாராட்டல் அக இலக்கண் மரபாம். பாவேந்தர் படைத்த தலைமகன், கண்ணுக்கொரு வண்ணப்புறா காதுக்கவள் கானக்குயில் பெண்ணுக் கரசாண்வளை' என்று தலைமகளின் நலத்தைப் புகழ்கின்றான். பாண்டியன் பரிசிலே தலைவன், மின்னலிடை, கன்னல்மொழி இன்னும் சொன்னால் விரியுலகில் ஒருத்தி அழகின் உச்சி!' எனத் தலைவியைப் புகழ்ந்து கூறுவதில் இலக்கிய இன்பம் இலங்கக் காணலாம். ஒத்த காதல் கொண்ட தலைவன் தலைவியை, அவளோ அழகின் அரங்கு! நீயோ இங்காள் உற்ற இன்னொரு சேரன் ஒத்த வயதும் ஒத்த அன்பும் உள்ள இருவரின் உயர்ந்த காதலை ஓராயிரம் ஆண்டுக் கொரு முறையாக இவ்வுலகு இன்றுகண்டு இன்பம் பெறட்டும்" என வேறொரு பாத்திரத்தின் நிலையில் நின்று பாவேந்தர் வாழ்த்துவதை - பாராட்டுவதை அக இலக்கண மரபோடு பொருத்திப் பார்க்கலாம். 1 т—9