பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நல்கியது. மற்றொரு வகையாகக் கூற வேண்டுமானால், பாரதியால் பாரதிதாசனும், பாரதிதாசனால் பாரதியாரும் பயன் அடைந்தனர் என்றே சொல்லலாம்' என்று. பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கூறுவதும் இங்கு. நினைவுகூரத்தக்கது. பாரதியாரால் இனங்கண்டு கொள்ளப்பட்ட கனகசுப்பு ரத்தினம் பாரதிதாசனாக மாறினார். புரட்சிக் கருத்து. களைப் புதிய தமிழில் பாடியதால் புரட்சிக் கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டுத் தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் குடிபெயர்ந்தார். பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களில் இயற்கை, இலக்கியம், இயக்கம் என்று அமைந்துள்ள ஆய்வுரைகளின் முன்னுரையாகப் பாவேந்தரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றிய பாராட்டுரைகள் முதலிய துணைத் தலைப்புகளின் தொகுதியே இப்பகுதி. வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் மகாகவி பாரதியாருக்கு எட்டாண்டுகள் பின்னால் பி ற ந் த வ ர் பாரதிதாசன். பாரதியாருக்குப் பிறகு 43 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்த் தொண்டால் தன்னிகரற்று விளங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன். தமிழியக்கத்திற்குப் பாரதியார் வித்திட்டார்; பாரதிதாசன் தாமே தமிழியக்க மாக மாறி, தமிழரின் வாழ்வும் வளமும் தமிழில் இருப்பதை உணர்த்தி, தமிழினத்தை எழுப்பி, இணைத்து வெற்றிக் கொடி நாட்டினார். பிறப்பு பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 29ஆம் நாள் புதன்கிழமை இரவு 10.15 மணிக்குப் புதுச்சேரியில் பிறந்தார். இவரது பெற்றோர் கனகசபை முதலியார் - இலக்குமி அம்மையார் ஆவர். இவரது