பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மற்றுமொரு தலைவன், தலைவியின் நலத்தைப் பிற பொருள்களோடு ஒப்பிட்டு அவற்றினும் அவள் மேம்பட்டு விளங்குதலைச் சுட்டுகின்றான். மின்னொளி இன்முக நிலவே! நிலவு! விண்ணிலவே அகலாயோ! அன்னவள் இன்சொல் இசையே - இசையாம் ஆர்கடல் வாய டக்காயோ! கன்ன ங்கருங்குழல் மணமே - மணமாம் காட்டில் மலர் காள் அகல்வீர்?" GT G.Г நிலவு, கடலொலி. மலர்மணம் இவற்றோடு ஒப்பிடுகையில் தலைவியின் நலம் உயர்ந்து விளங்குவதாகக் கறுவது நயமுடையது. தலைவியைப் பாராட்டியதோடு தலைவன் நின்று விடவில்லை. தான் காணும் பொருள்களில் எல்லாம் அவள் களிநடம் புரியக்கண்டு களிக்கின்றான். அதனை இன்சொல்லின் வழியே கவிதையாக வடிக்கின்றான்: ஏட்டினில் கவிதை தன்னில் இவளைத்தான் காணுகின்றேன் கூட்டினிற் கிளியும் வானில் குளிரிளம் பிறையும் என்றன் வீட்டினில் திருவிளக்கும் அவள் எழில் விளக்கல் அன்றிக் காட்டவே இல்லை என்றன் கவலைக்கு மருந்து நெஞ்சே : நெஞ்ச வீடு காதலியை எண்ணிக் கலங்கும் கவலையைக் குடியமர்த்திக் கொண்டது. எனவே நெஞ்சம்தான் கவலைக்கு மாற்று மருந்து என்று கூறி, தலைவியின் உருவம் காணுமிடங்களில் எல்லாம் காட்சி தருவதாக மொழி கின்றான். நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்னும் இலக்கண மரபினைப் பாவேந்தர் தான் படைத்த தலைவனிடத்தே ஏற்றியுரைத்துள்ளமை எண்ணத்தக்கது.