பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் o 139 தலைவியின் நினைவைப் போற்றியவண்ணம் வாழும் தலைவனையும் பாவேந்தர் படைத்துள்ளார். நெஞ்சத்தில் கூத்து நிகழ்த்தும் தலைவியை நினைந்து படுத்துள்ள தலைவனை, நிலவு குளிர்வார்க்கக் காற்று நெளிய அலைகடல் இசையை அளிக்க மலர்சேர் பஞ்சணையில் தனியே படுத்தேன் நெஞ்சில் அவள் கூத்து நிகழ்த்துகின்றாளே!?? என இயற்கைச் சூழலின் இனிமையோடு வெளிப்படுத்தும் நிலை போற்றற்குரியது. தலைவி தரும் புன்னகை சாகும்வரை மறக்க முடியாதது என்பதை, தலைவியை நினைத்துத் தனிமையில் பேசும் தலைவன் வாயிலாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின் ஏகுமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான் திரும்பித் தோகையினை மட்டாக நோக்கினால் தான் குனிந்து சாகுமட்டும் நான்மறவாப் புன்னகையைச்

  • சாய்த்திடுவாள்' தனிமையிலும் தலைவியின் இனிமை நினைவு பயப்பதை இப் பகுதியின் மூலம் அறியலாம். இதுகாறும் நோக்கிய செய்தி களின் வாயிலாகப் பாவேந்தரின் அக இலக்கண மரபுப் பிடிப்பை உணர முடிகின்றது. வழிவழி வந்த தமிழிலக்கண இலக்கியச் சிந்தனைகளில் அவர் நாட்டம் கொண்டி ருந்தமை புலனாகின்றது.

தலைவனின் கூற்றாகப் பாடிய பாடலைப் போன்றே தலைவியின் கூற்றாகவும் காதல் பாடல்களைக் கவிஞர் பாடியுள்ளார். தன்னைப் பார்த்தும் பார்க்காதது போலச் சென்ற தலைவன் ஆசையைத் துரண்டிவிட்டு, பார்க்காதவன் போலே பார்த்துப் போனாண்டி-அந்தப் பாவி என் மனத்தில் ஆசையை விண்டி (பார்க்காதவன்...)