பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தீர்க்காதவன் போல்தன் ஆவலைத் தீர்த்தே சிரிக்காதவன் போலே மறைவாய்ச் சிரித்தே' சென்றதாகக் குறிப்பிடுகின்றாள். தலைவன் பார்த்தான்; ஆவலைத் தீர்த்தான்; சிரித்தான் என்றாலும் தலைவி அதில் முழுநிறைவடையவில்லை. கவிஞர் அதனை அழகுற மொழிந்துள்ள முறை இலக்கிய நெஞ்சங்கட்கு இனிய விருந்தாகின்றது. புரட்சிக்கவி காவியத்தில் உதாரன் மீது அமுதவல்லி காதல் கொள்கிறாள். அவனோ அரசனுக்கும், சமூக அமைப்புக்கும் அஞ்சி அவளது காதலை ஏற்கத் தயங்கு கிறான். அப்போது அமுதவல்லி, சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக் கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும் சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும் உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால் தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல் 75 எனக் காதல் வயப்பட்டு, தன் கருத்தை அவனிடம் உரைக் கின்றாள். முல்லைக்கொடி - சுற்றிப்;படர மாமரம் இடத் தருகின்றது; வண்டு தேனுண்ண மலர் வாய்ப்பளிக்கின்றது; இதனை நோக்கிய பிறகும் உன்னிடம் காதலுணர்வு அரும்ப வில்லையா? நானோ காதல் மிகக் கொண்டேன்; எனக்கு வெண்ணிலவும் தணலாய்த் தகிக்கிறது என இலக்கிய நயம்பட அமுதவல்லி வாயிலாகக் காதலைக் குறிப்பிடும் பாங்கு, கவிஞரின் கலைவண்ணத்திற்குக் காட்டாய் மிளிர்கிறது. எதிர்பாராத முத்தம் பாவேந்தரின் காதல் படைப்பு களுள் தலைமையானது. பொன் முடி, பூங்கோதை இருவரும் காதலர்கள். இவர்தம் காதலுக்குத் தடையாகப் பெற்றோர்கள் விளங்குகிறார்கள். எனினும் காதல்