பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 141 உணர்வு நாளும் நாளும் அவர்களிடையே வளர்ந்து வருகிறது. பூங்கோதை தன் காதலனுக்கு எழுதிய கடித மொன்றில் காதலால் விளையும் இன்பத்தைப் பரம் பொருளோடு ஒப்பிடுகின்றாள். இந்தச் செகத்தினில் உம்மை அல்லால் சத்தான பொருளைக் காணேன்! சாத்திரம் கூறுகின்ற பத்தான திசை பரந்த பரம்பொருள் உயர்வென்கின்றார் அப்பொருள் உயிர்க்குலத்தின் பேரின்பம் ஆவதென்று செப்புவார் பெரியார் யாரும் தினந்தோறும் கேட்கின்றோமே அப்பெரியார்களெல்லாம் வெட்கமாய் இருக்கு தத்தான்கைப்பிடித் தணைக்கும் முத்தம் ஒன்றேனும் காணார் போலும் ே எனப் பரம்பொருளை விடக் காதலால் விளையும் இன்பம் உயர்வானதை ஒரு பெண்ணின் கூற்றாக, பெண்ணுக்கே யுரிய நாணவுணர்வோடு கவிஞர் புலப்படுத்துகின்றார். பரம் பொருளைப் பேசுபவர்கள் காதல் வாழ்வின் இன்பத்தை அறியாதவர்கள் என்னுங் கருத்தையும், காதல் வாழ்வின் இனிமையை நுகர்ந்தவர்கள் பரம்பொருளை விடக் காதல் வாழ்வு சிறந்ததாகக் கருதுவார்கள் என்பதையும் இப்பாடற் பகுதி விளக்கி நிற்கிறது. அத்துடன் கவிஞர் காதலுக்கு அளித்த இன்றியமையாமையும் வெளிப்படுகின்றது. அடுத்து, ஒரு பெண் ஆண்மகன் ஒருவனைக் கண்டவுடன் நாணமுறுதலை நயமாகக் காட்டியுள்ள ஆசிரியரின் திறம் போற்றுதற்குரியது. எதிர்பாராத முத்தத்தில் பூங்கோதை நீராடிவிட்டுத் திரும்புகையில் பொன்முடி வருவதைக்கண்டு