பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மகிழ்கிறாள். அவன் அவளை நெருங்கும்போது இருவரும் ஒருவரை ஒருவர் நோக்குகின்றனர். தனது காதலனைக் கண்டவுடன் நாணம் பெருகுகிறது பூங்கோதைக்கு; உடன் தன்னுடைய திருத்தமான ஆடையை மீண்டும் திருத்திக் கொள்கிறாள் அவள். பெண்ணிற்குரிய உயர்பண்பினை அங்கே ஆசிரியர் அருமையாக வடித்துள்ளார். ... நிமிர்ந்தே அன்னோன் ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள் சின்னவிழி ஒளிபெருகும்! இதழ் சிரிக்கும் திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்' என்பது கவிஞர் வழங்கும் காட்சி. திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்' என்னும் தொடர் பெண்மைக்குச் சிறப்பளிக்கக் கூடிய நாண உணர்வைப் பூங்கோதை கொண்டிருந்தாள் என்பதையும், இவ்வாறு பெண்கள் ஆடையைத் திருத்தும் பண்பினை ஆசிரியர் உற்று நோக்கியுள்ளார் என்பதையும் குறிப்பாகச் சுட்டு கின்றது. அத்துடன் இத்தொடர் இலக்கிய நுகர்வுக்குத் துணைசெய்யும் கலைத்தன்மையைக் கொண்டு திகழ் வதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு ஆண் பெண் காதலை உணர்த்திய கவிஞர் அக்காதலுக்குத் தடை விளைக்கும் சமூகத்தையும் அதனை எதிர்த்து நிற்கும் காதலரையும் பாடியுள்ள நிலை காணவேண்டிய ஒன்றாம். நால்வருணப் பாகுபாட்டால் அமுதவல்லி உதாரன் காதல் தொடக்கத்தில் உறுதி பெறவில்லை. தனது காதல் தயக்கத்திற்குக் காரணமாக இரத்தவெறி பிடித்தலையும் சாதிச்சார்புச் சமூக அமைப்பு விளங்குவதை உதாரன் கூறுகின்றான். ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சம் சில சமயம் பார்த்திரங்கும் சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலையும் கால்வருணம் ஏனிரங்கும்"