பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 143 என்பது உதாரனின் வினா. இதற்குரிய விடையை அமுதவல்லி வாயிலாகக் கவிஞர் உரைக்கின்றார். சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும் போதாக் குறைக்குப் பொதுத் தொழிலாளர் சமூகம் மெத்த இழிவென்றும் மிகுபெரும் பாலோரை எல்லாம் கத்திமுனை காட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும் பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர் ஆவிகளையெனும் அர்ப்பணம் செய்வோம்’ ’ எனச் சமூக மாற்றம் காண்பதற்குச் சாவை அணைக்க அழைக்கின்றாள் அமுதவல்லி. கவிஞரின் சீரிய சமூக உணர்வு இதன் மூலம் வெளிப்படுகின்றது. காதலர் இருவர் கருத்தொருமித்துவிட்டபின் மற்றவர்க்கு அதில் வேலை கிடையாது என்று கவிஞர் ஆணித்தரமாக அறைகின்றார். ஆண், பெண் காதலைப் பாடியதோடு குழந்தை மணத்தின் கொடுமை, கைம்பெண் மணம் ஆகியவற்றையும் பாவேந்தர் பாடியுள்ளார். கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு தாவாச் சிறுமான் மோவா அரும்பு' என்று குழந்தையாக உள்ள பெண்ணைக் குறிப்பிடுகின்றார். அவளுக்கு இவ்வளவு சிறுவயதில் மணம் செய்து வைப்பதைக் கவிஞர் எதிர்க்கின்றார். காரணம் மணமகனோ வயதானவன். இப்பெண் வயதுக்கு வரும்போது இவன் இறந்தாலும் இறந்துவிடுவான். இவள் வாழ்க்கையை அனுபவிக்காமலே மரத்தினும் கீழாய் வாழ்ந்து மரிப்பதில் என்ன பயன்? பயனுடைய வாழ்க்கையாக ஒரு பெண்ணின் வாழ்க்கை அமைய வேண்டுமெனில் அவள் பருவமெய்திய பிறகே பிறருக்கு உரியவளாதல் வேண்டும் என்பது கவிஞரின் விழைவு. விதவைகள் மறுமணம் புரிந்து கொள்வதை வலியுறுத்தி எழுதியவர்களுள் பாரதிதாசன் குறிப்பிடத்தக்கவர்.