பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இங்கு வேரிற் பழுத்த பலா" என்பது விதவை குறித்த கவிஞரின் எண்ணம். அவர்கள் வாழ்வு மீண்டும் மலர வேண்டும் என்ற நோக்கில் பல பாடல்களைப் புனைந்துள்ளார் கவிஞர். கைம்பெண் ஒருத்தியின் துயரத்தை அவலச் சுவைபட மொழிகிறார். துணையிழந்த பெண்கட்குக் காதல் பொய்யோ? சுகம் வேண்டாதிருப்பதுண்டோ அவர்கள் உள்ளம் அணையாத காதலினை அணைக்கச் சொன்னீர் அணை கடந்தால் உங்கள் தடை எந்தமூலை? பெண்ணுக்கொரு திே கண்டிர் பேதமெனும் மதுவை யுண்டிர் கண்ணிலொன்றைப் பழுது செய்தால் கான்றுமிழாதோ? கான்றுமிழாதோ? புவிதான் பழியாதோ' என்று பாதிக்கப்பட்ட பெண் வினவுவதாகப் பாடியுள்ள கவிதை சோக இழையும், புதுமைச் சிந்தனையும் இணைந்த கவிதையாக அமைகின்றது. காதலைப் பல நிலைகளில் வலியுறுத்திய கவிஞர் குடும்பத்தில் நிகழும் காதலையும், குடும்பப் பொறுப்பில் பெண்கள் வகிக்கும் பெரும் பொறுப்பையும் திறம்பட எழுதியுள்ளார். பெண்மைச் சிறப்பு, குடும்ப நலம், அமைதி வேட்கை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது கவிஞரின் குடும்ப விளக்கு. இதன் கண்ணும் காதல் மணத்தை வரவேற்றுப் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தலாகிய திருமண வாழ்வு நல்ல குடும்பத்திற்கு வித்து நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்னும் உ ரை, உண்மையுரை. குடும்பத்தில் மனைவியின் கடமை பெரிது. கண்னவள் மாமியார்க்கே காப்பவள் மாமனார்க்கே உண்மையில் வாழ்க்கையில் உயிராவள் கணவனுக்கே*