பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 145 என்று பாவேந்தர் மனைவியின் நிலையைச் சுட்டுகிறார். குடும்ப விளக்கிலே தங்கத்தின் இயல்பை, பொருளையும் பெரிதென் றெண்ணாள் பூண் வேண்டாள் தனை மணந்தோன் அருளையே உயிரென் றெண்ணும் அன்பினாள்: என உரைக்கின்றார் ஆசிரியர். பெண்ணுலகிற்கு எடுத்துக் காட்டாய் தங்கத்தைப் படைத்து, பெண்ணிலாத வாழ் வில்லை என்பதை உணர்த்துகின்றார். பிள்ளைகளை வளர்க்கும் முறைக்காகத் தங்கமும் மணவழகும் பரிசு பெறுகின்றனர். அவர்கள் பிள்ளைகளை வளர்த்த முறையை, ஆல் ஒடிந்து விழுந்தாலும் தோள்கள் தாங்கும் அப்படி நாம் பிள்ளைகளை வளர்த்ததாலே " எனப் பெற்றோர்கள் வாயிலாகவே பாடியுள்ளார் பாவேந்தர். - கணவனைப் பேணி, பெற்றோர் உற்றோரைக் காத்து, பிள்ளைகளைப் பெரியவராக்கி, நற்பொறுப்புகளை அவர் களுக்களித்துக் குடும்பச் சக்கரத்தின் சுழற்சிக்கு அடிப்படை யாய் அமைகின்றாள் பெண். ஒத்த அன்புடைய கணவன் மனைவியர் இல்லறம் மேற்கொண்டு பல ஆண்டுகள் கழிந்த பின்னர் அவர்கள் தங்கள் இளமைக்கால வாழ்வை நினைத்துப் பெருமித்ம் கொள்வர். அப்படிப் பெருமிதம் கொண்ட பெரியவர் குடும்பவிளக்கில் வரும் மணவழகர். அவர் வாழும் உலகில் தொல்லைகள் ஏதும் இல்லை. அதற்குக் காரணம் அவர் மனைவியே. இதனை, மன வழகர் வாயிலாக, தொல்லையிலா அவ்வுலகம் யான் வாழும் இல்லம் பகையில்லை அங்கின்மை இல்லை பிணி இல்லை பழியில்லை என்துணைவி அரசாண்ட தாலே "