பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்ற பாடலில் குறிப்பிடுகின்றார் பாவேந்தர். துணைவி யின் பெருமையில் திளைத்திடுவதால் அவளை மறக்க இயலவில்லை. வயது கழிந்தது என்றாலும் அவள் நெஞ்சில் நான் நிலைத்து விட்டேன்; அவள் நினைவாகவே நானும் வாழுகின்றேன். கதையாகிக் கனவாய்ப்போகும் நிகழ்ந்தவை; எனினும் அந்த முதியோளே வாழுகின்றாள் என்நெஞ்சில் மூன்று போதும்?? என்று முப்போதும் அவள் நினைவில் நிற்பதைக் காட்டு கையில் முதிர்ந்த அன்பின் திறம் தெற்றெனப் புலனாகிறது. முதியவரின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவளது உடலழகு அன்று; பணி விடைகளும் அன்று. அவள் இருப்பதொன்றே இவருக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவளுடம்பு சதிராடும் கடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி மதியல்ல முகம் அவட்கு வறள்கிலம்! குழிகள் கண்கள் எது எனக்கு இன்பம் நல்கும் இருக்கின்றாள் என்பதொன்றே. * என்னும் பாடல் பாவேந்தரின் கவிதைச் சிறப்புக்கு, கருத்துச் செறிவுக்கு உலகியல் சிந்தனைக்குச் சிறந்த சான்றாய்த் திகழ்கிறது. முதியோர் காதலை எண்ணிப் பார்த்தவர் என்ற முதன்மைப் பெருமை பாவேந் தருக்குண்டு. மனைவியின் நினைவால் நிலைத்த இன்பம் பெற்றதாகக் கணவர் கூறுகிறார். கணவனைச் சுமக்கும் மனம்தான் என் வாழ்வு அமைதிக்குக் காரணம் என்கிறார் மனைவி.