பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 147 அறம்செய்த கையும் ஒயும் மக்களை அன்பால் தூக்கிப் புறம்போன காலும் ஓயும் செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம் கேட்ட காதும் ஓயும் செயல்கண்ட கண்ணும் ஓயும் மறவனைச் சுமக்கும் என்றன் மனம்மட்டும் ஓய்தலில்லை" i. கணவனை ஓயாது நினைத்துக் கொண்டிருக்கும் மனைவி யின் நிலை இது. பாவேந்தர் படைத்த முதியோர் காதல்வாழ்வு அன்புலகை நோக்கி நடைபோடும் உலகத்திற்குக் கிடைத்த புதிய பாதை எனப் புகல்வது பொருத்தமுடையது. இறுதியாகப்.ெ பண்கள் இன்றேல் ஆண்கள் வாழ்வு. சிறக்காது என்று கூறிப் பெண்மையைப், பெண்ணுரிமை யைப் பலவாகப் புகழ்கின்றார் பாவேந்தர். போர் பூசலற்ற, அமைதி தவழும் இன்பநிலை பெண்கள் இட்ட பிச்சை என்கிறார் கவிஞர். பெண்கள் இட்ட பிச்சைதான் ஆண்கள் பெற்றஇன்பம் அனைத்தும் அழகிய பெண்கள் இட்ட பிச்சைதான் கண்ணைக் கவர்வார் எண்ணம் கவர்வார் காதலால் இன்ப வாழ்வளித்திடும் பெண்கள் இட்ட பிச்சைதான் அன்னை தயை உடையார்-பணிவினில் அடியவர் போன்றார்-மலர்ப் பொன்னின் அழகுடையார் பொறுமையில் பூமிக்கிணை ஆவார் இன்பம் அளிப்பதில் தாசிகள்-அவர் எண்ணம் அளிப்பதில் அமைச்சர்கள் அழகிய பெண்கள் இட்ட பிச்சைதான்" தாயாக, பொறுமை நிறைந்தவராக, நல் மனைவியாக, தேர்ந்த அமைச்சராக பெண்கள் விளங்குவதால் ஆண்கள்