பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 13 தந்தையார் முதலில் கடல்மூலம் வாணிபமும், பின் பலசரக்குக் கடையும் வைத்து நடத்திய சமயப்பற்று உடையவர். இவருடைய பெற்றோர்கள் இவருக்கு இட்டு அழைத்த பெயர் சுப்புரத்தினம். இவரது குருவின் பெயர் சுப்பிரமணிய பாரதியார். சுப்பிரமணியத்தின் ரத்தினம் என்று குறிப்பால் உணர்த்துவது போல இயல்பாகவே பெயர் அமைந்தது நினைவிற்குரியது. கல்வி பாவேந்தர் பாரதிதாசன் முறைப்படி தமிழ் கற்றவர். அவருக்குத் தொடக்கக் கல்வி அளித்தவர் திருப்புளிச்சாமி அய்யா என்பவர். அவர் பாரதிதாசன் உள்ளத்தில் தமிழ்க் காதல் அரும்பச் செய்தார். அவர் தமிழை இலக்கண இலக்கிய அடிப்படையில் முதலில் முதுபெரும் புலவர் பு. அ. பெரியசாமியிடமும், பின்னர்ப் பெரும்புலவர் பங்காரு பத்தரிடமும் ஆழ்ந்தும் அகன்றும் கற்றுக் கொண்டார். 'என் தமிழ்ப் புலமையில் எனக்கு எப்போதும் நம்பிக்கையும் உறுதியும் உண்டு. எனக்குத் தமிழ் பயிற்றிய மூன்று ஆசிரியர்களும் பெரும்புலமை பெற்றவர்கள்' என்று பாரதிதாசனே குறிப்பிட்டுள்ளார். பாவேந்தர் புலவர் தேர்வில் புதுவை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேறினார். அப்பொழுது அவருக்கு 17 வயதுதான். அவர் இலக்கண இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்ததால் பாரதியாருக்கு இலக்கணத் தெளிவைக் கொடுக்குமளவிற்குச் சிறந்து விளங்கினார்.

பாரதிதாசனார் தமிழ் இலக்கியத்தில் பாரதியாரை விட ஆழ்ந்து பயின்றிருக்கின்றார். இவ்வாறு சொல்வதால் பாரதிக்குத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லையோ வான்று எவரும் ஐயுறவேண்டா. கம்பன், வள்ளுவன் ஆகிய இருவரிலும் பாரதி ஈடுபட்டது போல் சங்கப் பாடல்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவில்லை. அதற்குரிய வாய்ப்பு