பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணக்கம்

148 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இன்பமுறுகின்றனர்; எனவே வையக வாழ்வு சிறக்கிறது. புரட்சிக்கவிஞர் பெண்களுக்கு அளித்த சிறப்புகளை இந்த ஒரு பாடலைக் கொண்டே மதிப்பிட்டுவிட முடியும். இந்த நூற்றாண்டில் பெண்மையை, பெண் கல்வியை, பெண் உரிமையை, பெண் முன்னேற்றத்தை இவ்வளவு விரிவாகப் பாடிய தமிழ்க் கவிஞர்கள் வேறு யாரும் இருப்பதாகக் கூற முடியாத அளவிற்குப் பாவேந்தரின் பாடல்கள் பல பெண்மைச் சிந்தனையை முழக்குகின்றன. பாவேந்தர் பாரதிதாசனின் காதலைப் பற்றிய பாடல் கள் மிகுதியானவை எனத் தொடக்கத்தில் சுட்டப்பட்டது. காதல் உணர்வு இடம், மொழி, இனம், நாடு, இவற்றை யெல்லாம் கடந்த நிலையில் உயிர்களிடையே தோன்றும் பிணைப்புநிலை. இந்தப் பிணைப்புக் குறித்த பாடல்கள் பல பாடுவதன் மூலம்-காதல் உணர்வின் மூலம்-மக்களை ஒன்று சேர்க்க முடியும்; ஒற்றுமைப்படுத்த முடியும்; சாதி, சமயப் பூசலற்ற நேரிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கொள்கையைக் கொண்டவராகப் பாரதிதாசன் விளங்குகிறார். கலப்பு மணங்களும், காதல் மணங்களும் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்க வல்லன. என்ற கருத்தில் அவர் கொண்டிருந்த உறுதியை நாம் உணர்கின்றோம். பொதுவான வாழ்க்கை முறைகள், இளைஞர்களின் முன்னேற்றத்திற்குரிய காதல் வாழ்வு இவற்றைப் பாடிய கவிஞர் வேறு சில சமூக உணர்ச்சிகளையும் தம் பாடல் களில் வடித்துள்ளார். அவற்றுள் மூட நம்பிக்கையைக் சாடியது முதன்மையானது. மூடநம்பிக்கையால் விளையும் கேடுகளை விளக்குவதற்காகவே இருண்ட வீட்டை ப் பாவேந்தர் படைத்துள்ளார். கடவுள், சடங்குகள் இவற் றால் நேரும் பயன்கள் எதுவுமில்லை; எனவே அவற்றைக் கைவிடுதல் நல்லது என மண்ணக மக்களுக்கு மதியூட்டு கின்றார். நன்றி!