பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரம ணியன் 1492 சாணிக்குப் பொட்டிட்டு, சாமி எனக் கும்பிடும் வழக்கம் வெட்கத்திற்குரியது. இது போன்ற மூடப்பழக்கம் இருப்பதால் நமது உயர்வு தடைப்படுகின்றது. நாம் உயர்ந்து விளங்கும் நாள் எப்போது? என்ற வினாவை, நல்ல இமயம் நலங்கொழிக்கும் கங்கைகதி வெல்லத்தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை செந்நெல் வயல்கள் செழுங்கரும்புத் தோட்டங்கள் தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள் இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில் முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன? செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன? மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம் ஒடுவதென்றோ? உயர்வ தென்றோ?' ' என்னும் பாடற்பகுதியில் எழுப்பி நம்மைச் சிந்தித்துச் செயல்பட வைக்கிறார் கவிஞர். பாவேந்தரின் பகுத்தறிவுச் சிந்தனை விளக்கமுற வழிகாட்டியவர் தந்தை பெரியார். பெரியாரின் எண்ணங்களைத் தம் எழுத்தில் வடிக்கும் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் புரட்சிக்கவிஞர். பெரியாரின் பின்னணி, அக்கால அரசியல், சமூகப் பின்னணி ஆகியன கவிஞரின் மூடப்பழக்க ஒழிப்பிற்கு, உறுதுணையாயின. தொழிலாளர்களின் உயர்விற்குக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன். தொழிலாளர்களைப் பற்றிய அவருடைய கவிதைகள் அவரது தொழிலாளர் நலக் கொள்கைக்குச் சான்றாகின்றன. நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாகப் பெருவிலங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருகைக்கல்லின் நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக்கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில் புதுக்கியவர் யார்???