பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i50 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்னும் வினாவை எழுப்பித் தொழிலாளரிடையே ஒற்றுமையுணர்வை உருவாக்குகிறார் கவிஞர். சித்திரச் சோலைகள், தாமரைத் தடாகங்கள், யந்திரக் கூட்டம் மரமிகு பாதைகள், என்றிவற்றை வடித்தளித்தவர் தொழிலாளர். அவர் வாழ்வு செம்மையுற வேண்டும்; இன்றேல் முன்னேற்றம் தடைப்படும். அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதும், அவர்களது உணர்வை மதியாமல் இருப்பதும் பயனற்றவை. நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால் கிறை தொழிலாளர் உணர்வு மறைந்து’’ போகாது என்று அடக்கி ஆளும் வஞ்சர்க்கு நினை வூட்டுகிறார். உழைக்கும் தொழிலாளரின் உயர்வுக்கு வழிவகுப்பது பொதுவுடைமைக் கொள்கை. அத்தகு சமுதாயம் அமைய வேண்டும் என விழைகின்றார் புரட்சிக் கவிஞர். அதன் விளைவே உலகப்பன் பாட்டு. * புதுக்கணக்குப் போட்டுவிடு பொருளையெல்லாம் பொதுவாக எல்லோர்க்கும் நீ குத்தகை செய்”* என உலகப்பனை எச்சரிக்கிறார் ஆசிரியர். பொது வுடைமைக்கு வழி வகுக்கவில்லையெனில் மக்களே அதனைப் பெற முயல்வர். ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொ டிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ?" என்று பொதுமை உலகு அமைய வேண்டிய முறையை எடுத்துச் சொல்லி நமக்குப் புதுப்பாதை காட்டுகின்றார் கவிஞர். எல்லோரும் ஒர் குலம்; எல்லோரும் ஒர் இனம்: எல்லோரும் ஒர் நிறை என்னும் பாரதியின் சமத்துவப்