பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 151 பார்வை மேலும் கூர்மையடைந்து ஒளிருவதைப் பாவேந்த சிடம் காண்கிறோம். .ெ பா து ைம ச் சிந்தனையால் ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைக்கமுடியும் என உரைத்த புரட்சிக் கவிஞர் உலக மக்களை ஓரின மாகக் கருதும் உயரிய பார்வையை நமக்கு அளித்துள்ளார். உன்வீடு-உனது பக்கத்து வீட்டின் இடையில் வைத்த சுவரை இடித்து வீதிகள் இடையில் திரையை விலக்கி நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு! வானை இடிக்கும் மலைமேல் ஏறுவிடாமல்! ஏறு மேன்மேல்! ஏறி நின்று பாரடா எங்கும் எங்கும் பாரடா இப்புவி மக்களைப் பாரடா உனது மானுடப் பிறப்பைப் பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் ‘என் குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள் அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு பிரிவிலை எங்குப் பேதமில்லை உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்?" என்னும் கவிதையில் கவிஞரின் உலகம் தழுவிய நோக்கினை உலக மக்களை எல்லாம் பேதமின்றி நோக்கும் தன்மை யினைக் காணலாம். எனவேதான் பாவேந்தர் ஒர் உலகக் கவிஞர் எனப் போற்றப்படுகின்றார். = இதுகாறும் கண்டவற்றால் பாவேந்தர் கவிதைகளின் பாடுபொருள்கள் தனிமனித வாழ்க்கை, பொதுவான ஒழுகலாறுகள், இளைய தலைமுறைக்குரிய எழுச்சிக்