பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கருத்துகள், காதல் உணர்வு, குடும்பமேன்மை, பெண் னுரிமை, மூடப்பழக்க ஒழிப்பு, தொழிலாளர் சிந்தனை, பொதுவுடைமை நோக்கு, பரந்த உலக நோக்கு ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டிலங்கும் பான்மையினை அறிகின்றோம். இவையன்றிக் காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நல்கும் பத்திரிகையைப் பாடியுள்ளார். பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகையைப் பெண்ணாக உருவகித்து, அறிஞர்தம் இதய ஒடையின் ஆழநீரினை மொண்டு மக்கள் எண்ணம் செழிக்கும் வண்ணம் ஊற்றிக் குவலயம் ஓங்கச் செய்யும் அதன் பண்பினைப் பகர்கின்றார். கல்வியறிவைப் பெருக்கும் புத்தகசாலை குறித்தும் கவிஞர் பாடியுள்ளார். புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில் புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்?? என்று அவர் விரும்புகின்றார். இளகிய வெல்லம் மாற்றி நல்லதாய் ஈவோம் இன்றே புளியோகை யிருப்பிலில்லை பொதிக்கொரு நூறு ரூபாய் மிளகுக்கு விலைஏ றிற்று வெந்தயம் வரவே யில்லை? ? எனும் கவிதை மளிகைப் பொருட்களைப் பாட்டுப் பொருளாகக் கொண்டுள்ளமை காண்க. இதுபோன்றே யாத்திரைக்குச் செல்கையில் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களையும் கவிஞர் கவிதையாக வடித்துள்ளார். கவிஞரின் ஆற்றலுக்கு இவை சான்றாகின்றன. இப்படிப் பல செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்ட பாவேந்தரின் கவிதைகளில் மனித வாழ்வை மேம்படுத்தும் கருத்து வளம் நிறைந்து கிடக்கின்றது: இலக்கிய நுகர்வுக்குத் துணையாகும் வண்ணம் உணர்ச்சி