பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 153 யுடனும் கற்பனையுடனும், அழகிய வடிவத்தோடும் அவற்றைக் கவிஞர் வெளியிட்டுள்ளார். வடிவம் கலையின் வடிவம் என்பது ஒருமுகமாக இயையும் முழுமை என்று சுட்டப்படுகிறது. உணர்ச்சி, கற்பனை, கருத்து இவற்றைப் படிப்போரிடத்து முழுமையாகச் செலுத்தும்வண்ணம் ஏற்றதொரு வடிவத்தைக் கலைஞன் கையாளவேண்டும். இலக்கியக் கூறுகளின் முழுமை பெற்ற நிலை வடிவத்தில் ஒளிருதல் இயல்பு. இவ்வாறு அமையும் வடிவத்திற்கு ஏற்ற சொற்களும், அதற்கு இயைபுடைய நடையும் இன்றியமையாது வேண்டப்படுவன. வடிவச் இறப்பிற்குக் கலைஞரின் உள்ளம் காரணமாகின்றது. கலைஞரின் உள்ளத்து உணர்ச்சியே வடிவாகின்றமையால் அவரது உணர்வுகள் முதல் நிலை வகிக்கின்றன. உணர்வு களின் ஒருமித்த சேர்க்கையால் வடிவத்தில் முழுமையும், இயைபும் ஏற்படுகின்றன. பாவேந்தரின் பாடல்கள் பலவும் வடிவ அமைதியோடு திகழ்கின்றன. வானுக்கு நிலவு வேண்டும் வாழ்வுக்குப் புகழ் வேண்டும் தேனுக்குப் பலாச்சுளை வேண்டும்-என் செங்கரும்பே நீ எனக்கு வேண்டும் மீனுக்குப் பொய்கை வேண்டும் வெற்றிக்கு வீரம் வேண்டும் கானுக்கு வேங்கைப் புலி வேண்டும்- என் கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும் வாளுக்குக் கூர்மை வேண்டும் வண்டுக்குத் தேன் வேண்டும் தோளுக்குப் பூமாலை வேண்டும்-அடி தோகையே நீ எனக்கு வேண்டும் a 1 m -–10