பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காளுக்குப் புதுமை வேண்டும் நாட்டுக்கு உரிமை வேண்டும் கேளுக்கே ஆதரவு வேண்டும்-அடி கிள்ளையே நீ எனக்கு வேண்டும்.' இவ்வடிவப் பாங்கு அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்" என்னும் வள்ள ற் பெருமானின் பாடல் வடிவத்தோடும், காணிநிலம் வேண்டும்-பராசக்தி, காணி நிலம் வேண்டும்' என்னும் பாரதியின் பாடல் வடிவத் தோடும் ஒத்திருக்கின்றமை நோக்கத்தக்கது. எவை எவை எவற்றைப் பெற்றிருந்தால் அவற்றுக்குச் சிறப்பு நேரும் என்பதைக் கூறுகின்றார். ஆடவன் ஒருவன் நல்ல மனைத் தக்க மாண்புடையவளைப் பெற்றிருந்தால்தான் அவன் வாழ்வு சிறக்க முடியும் எனும் வள்ளுவர் உள்ளத்தையும் இப்பெரிய வடிவமைப்பின் உள்ளீடாகக் காட்டுகின்றார் கவிஞர். இவ்வாறு இப்பாடல் பரந்து விரிந்திருப்பினும் கருதுகோள் ஒன்றினைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளமை வடிவ முழுமையின் வெற்றிக்கு எடுத்துக் காட்டாகின்றது. பாழாய்ப் போன என்மனம் ஒரு நாய்க்குட்டி-அதைப் பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி உன்மேனி ஒரு பூந்தொட்டி உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி ஏழைக்கு வடித்து வைத்த சோறு-பணம் இருப்பவருக்குச் சாத்துக்குடிச் சாறு பெருக்கெடுத்த தேனாறு பெண்ணே உன் எண்ணம் கூறு காணக் காண ஆசைகாட்டும் முத்துநிலா-இ கடுகடுப்புக் காட்டுவதும் என் மட்டிலா வேரில் பழுத்த பலா வேண்டும் போதும் தடங்கலா?