பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எனும் இப்பாடல் நந்தவனத்தில் ஒர் ஆண்டி என்ற சித்தர் பாடலை உருவெடுத்து நிற்கிறது; ஒவ்வோர் அடியின் இறுதிச் சீர்களும் சந்த ஒலியில் ஒன்றுபட்டு இறுதி இயைபுடன் அமைகின்றமை காணலாம். இவ்வடிவமும் காதல் உணர்வுகளை அடியொற்றியதாகவே உள்ளது. இரு உருவும் ஒரு மனமுமாக இருக்கவேண்டிய இல்லறம் கனவன் மனைவியர் தமக்குள் உள வேறுபாடு கொண்டால் இல்லறம் சிறவாது என்பதை விளக்க வரும் கவிஞர், சீரிய வடிவத்தைக் கருவியாகக் கொள்கின்றார். எங்கிருந்தாயடி என்குடிக்கிப்படி மங்கிப் போக வைத்தாய் காலடி பொங்கலாண்டி யாகப் போம்படி புரிவதெல்லாம் மிகவும் அழும்படி எனவே இப்படி முடித்தார் முதலடி தானும் தொடங்கினாள் தாளத்தின்படி ஊருக்கழித்தாய் உருப்படவா ே நாட்டுக்கழித்தாய் கலம்படவா நீ இனியும் ஊரில் எடுபட வாே என்று கூறி எடுத்தாள் அம்மை இரண்டாம் அடியை இப்படி முடிக்குமுன் வந்த அண்ணன் வந்தவழியே சந்தடியின்றிச் சடுதியிற் சென்றான்." வீட்டுக்கு விருந்தாக வந்து கொண்டிருப்போரைக் கவனியது வசைபாடிக்கொள்ளும் இரு காதலர்களை - அவகளது நிலையை வெளிப்படுத்தும் நோக்கில் ஆசிரியர் சந்த இன்பம் பெருகும் வண்ணம் பாடிய பாங்கினை நோக்கலாம். இதன் கண் மனப்பூசலோடு உரையாடும் இருமாந்தர்களின் உருக்காட்சியை நம் கண்முன் கவிஞர்