பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 157 வr வ ைமுத்துள்ளமை ஆழ்ந்து நோக்குங்கால் அறிய முடிகின்றது. எடுப்பு நூலைப்படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி உடனெடுப்பு காலையிற்படி கடும்பகல்படி மாலை இரவு பொருள் படும்படி நூலைப்படி! அடிகள் கற்பவை கற்கும்படி வள்ளுவர் கொள்கைப்படி கற்கத்தான் வேண்டும் அப்படி கல்லாதவர்கள் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப்படி அப்படியே இன்பம் படி இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள்படி அதன்படி புறப்பொருள்படி கல்லபடி புகப்புகப் படிப்படியாய் புலமை வருமென் சொற்படி சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி சேதி அப்படி தெரிந்துபடி தீமை வந்திடுமே மறுபடி நூலைப்படி! பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி!