பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் களும் அவர்க்கில்லை. இதன் எதிராக வடநாட்டில் சென்று வடமொழியையும் வேறு உபநிடதங்களையும் கற்று அவற்றுள் மூழ்கும்படியான வாய்ப்புப் பாரதிக்குக் கிடைத்தது. பாரதிதாசனுக்கோ புதுவையை விட்டு வெளிச்செல்ல வாய்ப்பு ஏற்படாமையின், தமிழ் இலக்கியச் சுனையில் ஆழ்ந்து மூழ்கித் திளைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இருவரையும் திசை திருப்பி நேர் எதிர் எதிரான பாதைகளில் செலுத்திவிட்டது" எ ன் று. அ. ச. ஞானசம்பந்தன் கூறுகிறார்." இளமையிலேயே பாரதிதாசன் தமது தகுதியாலும் தனித் திறமைகளாலும் புதுச்சேரி மக்களுக்கு அறிமுக மாகிவிட்டார். அவரது குரல் இனிமையானது, இசை யோடு அவர் பாடவல்ல வராதலால் பள்ளி நாடகங்களில் நெஞ்சங்களை அள்ளும்படி நடித்தார். ஆறாம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்ற அவர் அவ்வப்போது எழுதிய கவிதைகளின் மூலம் புதுவை இலக்கிய வட்டாரத் தில் தமது முத்திரையைப் பதித்துக் கொண்டார் . பின்னாளில் அவர் இசைப்பாடல்கள் எழுத இந்த இளமை வாழ்க்கை அடித்தளம் அமைத்தது. "தராசின் வாழ்த்து பாவேந்தரின் வாழ்க்கை தென்றலாய்த் தொடங்கிப் புயலாய்ப் பரவியது. 1908-ல் பாரதியாரைக் கண்டு பழகியது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. பாரதியாரின் இலக்கியத் தராசு" சுப்புரத்தினத்தைப் பற்றி, இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க்கவிராயர் வந்தார்; கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர் கூட அந்தக் குலத்தானென்று நினைக்கிறேன்' என்று தொடங்கி, நல்ல தொண்டை' என்று கூறுவதும், *புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?' என்று வினவுவதும்,