பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தொடங்கையில் வருந்தும்படி இருப்பினும் ஊன்றிப்படி அடங்காஇன்பம் மறுபடி ஆகும் என்ற ஆன்றோர் சொற்படி' நூலைப்படி! எனும் இச்சொற்கலை ஒவியம், உண்மையை உணர்த்தும் சங்க இலக்கியம், திருக்குறள் இரண்டையும் படிக்க வேண்டும்; மருட்டுகின்ற மதம் கூறும் நூல்களையெல்லாம் வெறுத்துப் பொசுக்க வேண்டும் என்ற பகுத்தறிவு முழக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சாதி வேற்றுமையைக் களைவதற்கு ஏற்ற பருவம் பள்ளிப்பருவம் என்பதை உணர்ந்து இளம் சிறார்களை எதிர்காலச் சிற்பிகளாய் உருவாக்கும் பொறுப்புணர்வோடு பாவேந்தர் இப்பாடலைப் படைத்துள்ளார். இதன்கண் படி எனும் சொல் திரும்பத் திரும்ப வந்து இலக்கிய நயமும், இனிய ஓசையும் ஊட்டி நிற்கின்றது. இப்பாடல் அடிகளில் படியாத நெஞ்சங்கள் உள்ளபடியே இருக்கமுடியாது. தமிழ்நாடு, தமிழ்மொழி இரண்டையும் இரு கண்களாகப் போற்றும் கவிஞர் தமிழ்மொழியை ஒவ்வொரு வரும் படிக்க வேண்டும் என்ற தம் எண்ணத்தை ஒரு பெண்ணின் குரலில் ஒலிக்கச் செய்கிறார். குடும்பவிளக்கு எனும் நூலில் ஒரு நாள் நிகழ்ச்சி"யில் எல்லா அலுவல் களையும் முடித்து இரவு படுக்கச் செல்கின்ற கணவன் மனைவியர் தம் காதல் உணர்வின் ஊடே தமிழ் உணர்வை யும் மறவாது கிளக்கின்றனர். அப்போது தங்கம் கட்டிலருகே அமர்ந்து தன் கணவனிடம் பொதுத் தொண்டைப் புகழுகின்றாள். கணவன், கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக் கனிந்தமொழி சொன்னவுடன் அவன் உரைப்பான் வரும்படி வீதப்படி நான் தரும்படிக்கு வாக்களித்தபடி கணக்கர் திங்கள்தோறும் கரம்படி வீதித்தமிழர் கழகத்தார்கள்