பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 139 கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்! பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்கணக்கைப் பேசிவிட்டாய் கண்டபடி என அவளுக்கு மறுமொழியுரைக்கின்றான். அப்படியா! அறியாத படியால் சொன்னேன் அந்தமிழர் படிப்படியாய் முன்னேற்றத்தை எப்படியாயினும் பெற்றுவிட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில் இரார்களன்றோ! மெய்ப்படிகம் மறிஞரின் சொற்படி நடந்தால் மேற்படியார் செப்படி வித்தை பறக்கும் முற்படில் ஆகாததுண்டோ? எப்படிக்கும் முதற்படியாய்த் தமிழ் படிக்க வேண்டும் என்றாள்.'" என்று தமிழால்தான் எல்லாம் முடியும். ஆதலினால் முதற்படியாய்த் தமிழைப் படிக்கக் கூவி அழைக்கின்றார் கவிஞர். மேலும், இதில் சமுதாயத்தில் அரசியலார்க்கு வாக்களிப்பவர்கள் ஒட்டுக் கேட்பவர்களிடத்தில் கையூட்டுப் பெற்று விடுவதால் உண்மையானவர்களைத் தேர்ந் தெடுக்கத் தவறுகிறார்கள். அதனால் வெற்றி பெற்று வருபவர்களும், மக்கள் நலனைக் கருதுவதில்லை என்ற ஒரி அரசியல் உளவியலையும் கவிஞர் படைத்துக் காட்டு н) дг.пр.п. гf. - தமிழ்க் கோயில்களில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு ஒரு கொடிய நோயாகப் பல்லாண்டுக் காலமாக இருந்து வருவதைக் கண்டு உளம் தாங்காக் கவிஞர் இந்நிலையை வழிக்க வேண்டும் என்னும் ஆவேச முழக்கை. தெற்கோதும் தேவாரம் திருவாய்கன்மொழியான தேனிருக்கச் செக் காடும் இரைச்சலென வேதபாராயண மேன் திருக்கோயில் பால்?