பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் திருப்படியில் கின்றபடி செந்தமிழில் பெரும்படியார் அருளிச் செய்த உருப்படியை அப்படியே ஊரறியும் படியுரைத்தால் படியும் நெஞ்சில் தெருப்படியில் கழுதையெனச் செல்லுபடி யாகாத வடசொற் கூச்சல் நெருப்படியை எப்படியோ பொறுத்திடினும் நேர்ந்தபடி பொருள் கண்டிரே' எனும் பாடல் ஓங்கி ஒலிக்கின்றது. கடவுள்பற்று தனக்கில்லை என்று கவலைப்படாமல் பாவேந்தர் ஒதுங்கி பிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில், தமிழ் ஆலயங்களில் தமிழுக்குரிய உரிமை மறுக்கப்படுகிறது என்றால் அதனை நசுக்கிடத் துளிைதல் வேண்டும் என்ற உணர்வை உருகிய இரும்பாக உளத்தில் இருத்திய காரணத்தால் பொங்கி எழுகிறார் புரட்சிக் கவிஞர். இப்பாடலில் மொழிப்பற்றுப் பீறிட்டு எழுவதைக் காணமுடிகிறது. இவை போன்றே கவிஞரின் கவிதைகளில் சந்தத்திற்கும் பஞ்சமில்லை என்று கூறும் அளவிற்குப் பல பாடல்கள் உள்ளன. உணர்வுக்கேற்ற யாப்பமைப்பதிலும், சுவைக் கேற்ற வண்ணப் பாவமைப்பதிலும் எளிமைக்கும் எளிதாய், அரிதிற்கும் அரிதாய்ப் பாவமைப்பதிலும் கவிஞர் கைதேர்ந்தவர் என்பது வெள்ளிடைமலை. எடுமெடு மெடுமென எடுத்த தோர் இகலொலி கடலொலி இகக்கவே விடுவிடு விடு பரி கரி குழாம் விடும் விடுமெனுமொலி மிகைக்கவே'98 என்ற கலிங்கத்துப் பரணிப் பாடலும்,