பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 16.1 உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்ற தின் றுகான் எழுந்திராய் எழுந்திராய் கறங்கு போல விற்பிடித்த கால தூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்' எனும் கம்பராமாயணப் பாடலும் சந்த ஒலி மிக்கவை. படிப்போரைத் தட்டி எழுப்பி உணர்வலைக்குள் ஆழ்த்தும் வல்லமை பெற்றவை. இத்தகு கவிஞர் பரம்பரையில் வந்த கவிஞர் வெகுளிச்சுவை வெளிப்படப் பாடும் பாடல் வீர உணர்வின் எல்லைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. நாட்டின் சீர்கேட்டைச் சமாதானக் கொள்கையால் மாய்க்க முடியாது; கொலைவாளினை எடுத்துத் தீமை கொண்டோரைத் தீர்த்திட வேண்டும் என்ற எண்ணம்உளம் துடித்து உயிர்மூச்சு தீயாக மாறும் ஆவேசம் - அவரது படைப்பில் பாய்கின்றது. வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள் உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! அலைமா கடல் கிலம் வானிலுன் அணி மாளிகை ரதமே அவையேறிடும் விதமே யுன ததிகாரம் நிறுவுவாய் கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒருபுலியே உயர் குணமேவிய தமிழா!