பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தலையாய அறமேபுரி சரிநீதி யுதவுவாய் சமமே பொருள் ஜனநாயகம் எனவே முரசறைவாய் இலையே உணவிலையே கதி இலையே எனும் எளிமை இனிமேலிலை எனவே முர சறைவாய் முரசறைவாய்!-98 கற்றவரெல்லாம் கையிலே வாளேந்தும்படியான உணர்ச்சி நிலையை இக்கவிதை மொழிகிறது. சமத்துவப் பூ மணக்க வரும் எரிஞாயிற்றின் தன்மையைக் கவிஞரிடத்தே. காண்கிறோம். வசைபாடி இசை எழுப்புவது கவிஞரின் தனித்திறனுக்கொரு முத்திரை. மேற்கண்ட வடிவங்கள் யாவும் உணர்வுக்கும் கருத்துக்கும் பொருளாழத்துக்கும் ஏற்பப் பாவவடிவம் பெற்றுத் திகழ்வதோடு அல்லாமல் கவிக்கூறுகளில் அமைந்துள்ள கருதுபொருளையும் வடிவக் காட்சியாக நம் கண்முன் காட்டுகின்றன; வடிவங்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தினை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றன. உவமைகள் பொருள் விளக்கத்திற்காகக் கவிஞன் கையாளும் இலக்கிய உத்திகளுள் உவமையும் ஒன்று. அறியாத ஒன்றை அறிந்த ஒன்றனொடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமை. இதன் பயன்களாக புேலன் அல்லாதன புலனாதலும், அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும் என்பவை கூறப்படுகின்றன. கருத்தைப் புலப்படுத்துதல், சிந்தைக்கும் செவிக்கும் இன்பம் பயத்தல் GTGo" உவமையின் பயனை வரையறுக்க முடிகிறது. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளில் பயின்றுவரும் உவமைகள் உவமைக்குரிய இலக்கணத்தை - பயனைக்