பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 163" கொண்டுள்ளன. இவருடைய கவிதைகளில் அமையும் உவமைகளை சமூக மாற்றத்தைச் சித்திரிக்கும் உவமைகள், இயற்கைப் பொருளை விளக்கும் உவமைகள், தமிழ் அடிப்படையிலான உவமைகள், நிலவு அடிப்படையிலான ம வ ைமகள், நகைச்சுவை உவமைகள், அழகுக்காட்சி ய வமைகள், பழமொழி உவமைகள், அடுக்கு உவமைகள் a னப் பாகுபடுத்தலாம். இதுவரை நிலவி வந்த சூழலை மாற்றவும் புதிய சமூக மேம்பாட்டைக் கருத்திற்கொண்டும் படைக்கப்பட்ட உவமைகள் சமூக மாற்றத்தைச் சித்திரிக்கும் உவமை களாகும். உழைத்துச் சலித்த மக்களையும், உழைக்காமல் வளர்ந்த செல்வர்களையும் ஒப்புமைப்படுத்தி உரைப்பதற்கு, பொத்தல் இலைக் கலமானார் ஏழைமக்கள் புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்' என்னும் உவமையைக் கையாள்கின்றார். ஏழையினிடத்தே செல்வரின் நிலையை எடுத்துக்கூறி அவனுக்குப் புதிய பார்வையை அளிக்கும் போக்கு இவ்வுவமையின்மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மதம் போதை தரும் அபினி போன்றது என்பர். அதனைக் கொள்ளை நோயாக. உவமிக்கிறார் பாவேந்தர். கொள்ளை நோய் போல் மதத்தைக் கட்டியழும் வைதீகம் மான வைதீகத்தை விளக்க முயன்ற நிலை நோக்கத்தக்கது. மதம் மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது என்று புரட்சிக்கவிஞர் கருதினார். அதனை மக்களுக்கு ஏற்ற பொழுதில் ஏற்றவாறெல்லாம் எடுத்துச் சொல்லியுள்ளார். இங்கே மதத்தைச் சாடி நிற்கும் தன்மையைக் காணு கின்றோம். மதத்தை விட்டு விலகி வரும் நிலையை மனிதனிடத்தே ஏற்படுத்தும் நோக்கில் இஃது ஆளப்பட் டிருக்கிறது.