பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சாதி, மதம், மூடப்பழக்கங்கள் இவற்றை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் சண்டைகளைச் சூறாவளிக் காற்றின் முன் சிக்கிய துரும்பு போன்று அலைக்கழித்து ஒழிப்போம் என்று சமூகத்திற்குக் குரல் கொடுக்கிறார் பாவேந்தர், சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள் தாங்கி நடைபெற்றுவரும் சண்டையுலகிதனை ஊதையினில் துரும்பு போல் அலக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்! புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் சமூக மாற்றத்திற்குரிய உணர்வினை முழுமையாக இவ்வுவமையில் காண முடிகின்றது. பொதுவாக இயற்கைப் பொருள்களான மரம், நீர்நிலை, மலர், செடி, கொடி இவற்றை உவமையாகக் கூறுதல் நாம் காணக்கூடியது. ஆயின் இயற்கைப் பொருள் களுக்கும் உவமை கூறும் திறத்தை மிகுதியாகக் காண்ட லரிது. புரட்சிக் கவிஞர் இயற்கைக்கும் Ք- al/ 6 ) ԼD கூறியுள்ளார். நாவற்பழத்திற்கு, எருமைக்கண் போல் நாவல்-கனி' என எருமை மாட்டின் கண்ணை உவமையாகக் கூறுகின்றார். தாமரைச் சிற்றரும்பு, a

  1. H H = H = கரிய பாம்பின் தலைகள் போல்'

நிமிர்ந்திருந்ததாக உரைக்கின்றார். கூட்டமாக மலர்ந் துள்ள மலர்களுக்குப் பறவைக்கூட்டம் உவமையாகின்றது. பன்னூறு செழுமாணிக்கப் பறவை போல் கூட்டப் பூக்கள்' என்னும் இவ்வுவமை இயற்கையை விளக்கிடும் பாங்கில் புதுமையுணர்வு பொலிகிறது. கொந்திடும் அணிலின் வால்போல் குலைமுத்துச் சோளக்கொல்லை'