பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 165. என்பதில் முத்துச் சோளத்திற்கு, அணிலின் வால் உவமை யாகின்றமை காணலாம். இவ்வாறு இயற்கைப் பொருள் களுக்கும் உவமை கூறும் திறத்தைப் பாவேந்தர் பெற்றிருப் பதை நோக்கும்போது அவரது இயற்கை ஈடுபாட்டின் தன் மையும், உற்று நோக்கும் திறனும் புலனாகின்றன. புரட்சிக்கவிஞரின் தமிழ்மொழிப்பற்று அளத்தற் கரியது. அவர் உறக்கத்திலும் தமிழ் உணர்வை மறந்த தில்லை என்பர். வாய்ப்பு நேருமிடங்களில் எல்லாம் தமிழ் மொழியைப் பற்றிய செய்திகளை அள்ளி வழங்கியுள்ளார். அவ்வாறு அவர் வழங்கிய கருத்துகள் சில தமிழ்மொழி, இனம் அடிப்படையிலான உவமைகளாக உருப்பெற்றுள்ளன. காதலின் சொல்லாற்றல் தமிழின் இனிமையை ஒக்கும். இதனை, தண்டமிழின் இனிமைபோல் இனிய சொல்லான்' என்ற பாடலடியிற் காண்கிறோம். குடும்பவிளக்கில் உணவுண்ணும் முறையை, வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல் போல் சிற்றுண வுண்கின்றார்கள்' . என்று இலக்கிய நுகர்ச்சியை உவமையாக்கியுள்ள பாங்கு பாராட்டற்குரியது. தமிழைச் சுட்டிய கவிஞர் தமிழ் மன்னனையும் உவமையாகக் குறிப்பிடுகின்றார். குடும்பவிளக்கில் கணவனின் அழகைக் கண்டு உவந்த தலைவியின் நிலையை, ஆண்டநாள் ஆண்டு மாண்ட செந்தமிழ்ப் பாண்டிய மன்னன் மீண்டது போல உடுத்திய உடையும் எடுத்த மார்பும் படைத்த கணவனைப் பார்த்துக் கிடந்தாள்' என்று பாண்டிய மன்னனோடு ஒப்பிட்ட தன்மை தகவுடையது. தமிழர்களின் யாழும் உவமையாகியுள்ள திறத்தை,