பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#166 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தணியுறும் தமிழர் யாழ்போல் தன்மடிமேல் அமைந்த அணியுடல் குழந்தை கணடாள்.'" என்னும் பகுதியுள் காணலாம். குழந்தைக்கு யாழ் உவமை யாக்கப்பட்டமை, குழந்தையும், யாழும் மிழற்றும் ஒலிகளின் இனிமை கருதியதால் எனலாம். உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று கவிஞர் பாடியதோடு அந்த உணர்வோடு எப்பொழுதும் திளைத்திருந்தார் என்பதை எடுத்துக்காட்டும் வண்ணம் இவ்வுவமைகள் அமைகின்றன. அத்துடன் இலக்கியச் சுவைக்கும் இவை ஆதாரமாகின்றன. நிலவைப் பெண்ணாக உவமித்துப் பாடுதல் தமிழ் மரபு. பாவேந்தரும் இம்மரபைப் பின்பற்றியுள்ளார். இவர்தம் நீலவான் ஆடைக்குள் என்னும் பாடல் நிலவையும், பெண்ணையும் ஒருசேரக் குறித்து நிற்றல் காண்கிறோம். கவிஞர் நிலவைக் குழந்தைக்கு உவமை யாகக் கூறுகின்றார். தன் மனைவி கருவுற்றதைக் கேட்டு மகிழ்ந்த கணவனின் நினைவில் பிறக்கப் போகும் குழந்தை பெருநிலவாகக் காட்சி தருகிறது. வான் பெற்ற நிலவைப் போல வந்தொரு குழந்தை என்னை தேன் பெற்ற வாயால் அப்பா எனத் தாவும் திங்கள் எழில்’’’ என்னும் பகுதியுள் குழந்தைக்கு வான் நிலவு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆணை வானாகவும், பெண்ணை நிலவாகவும் வேறோரிடத்திற் கவிஞர் சுட்டுகின்றார். பெருந்திரு என்னும் அப்பேரெழிலாளை உன் திருமகன் வையத்திறல் மணப்பது பெருவான் நிலவைப் பெறுவ தாகும்!' குறிஞ்சித் திட்டில் இவ்வாறு நிலவினைப் பெண்ணுக் குவமையாக்கிய நிலை காண்கிறோம். மேலும்;