பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 15 இறுதியில் 'எழுக! நீ புலவன்' என்று வாழ்த்துவதும்' பாவேந்தர் தமது இலக்கியப் பணிகளைத் தொடங்கும் முன்பே அதற்குத் தகுதி பெற்றிருந்ததை உணர்த்து கின்றன. கல்விப்பணியும் கவிதைப்பணியும் பாவேந்தர் 1904-ல் காரைக்காலைச் சார்ந்த நிரவியில் ஆசிரியர் பணி ஏற்றார். ஒரு பக்கம் பள்ளி ஆசிரியர் பணியும், மறுபக்கம் நாட்டுத் தொண்டும் தொடர்ந்தன. அவருக்குப் புதுவையில் வந்து தங்கியிருந்த விடுதலை வீரர்களான வ.வே.சு. ஐயர். டாக்டர் வரதராசலு, அரவிந்தர் போன்றோருடன் பழகுகின்ற வாய்ப்புக் கிட்டியது. அவர்களுக்கு இயன்ற அளவு உதவினார். 23.1-1916-ல் பாவேந்தரின் தந்தை மறைந்தார். கவிஞருக்குக் குடும்பப் பொறுப்பு ஏறியது. ஆனால் அவரது பொதுப் பணிகளும் எழுத்துப் பணிகளும் தொடர்ந்து நடைபெறலாயின. -- 1919-ல் அவர் திருபுவனையில் ஆசிரியராகப் பணி யாற்றிக் கொண்டிருந்த வேளையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராக அவர் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி அரசு அவரை 11 ஆண்டு சிறைப்படுத்தியது. ஆனால் குற்றம் உறுதிப்படா நிலையில் விடுதலை செய்தது. பாவேந்தர் இழந்த வேலையை மீண்டும் பெற்றார். 1920-ல் பாவேந்தர் புவனகிரி பெருமாத்துரர் பரதேசியார் மகள் பழனியம்மை யைத் திருமணம் செய்து கொண்டார். கவிஞன், காலத்தின் குழந்தையாகின்றான். அவனே புதிய காலத்தைப் படைப்பாலும் பணியாலும் உருவாக்கு ன்ெறபொழுது மகா கவிஞனாகின்றான். இ த ைன ப் பாவேந்தரின் வாழ்க்கை உறுதிப்படுத்துகின்றது. அவர் கவிஞராக இருந்த காலத்தில் அக்காலத் தேவைகளாக